கொச்சி: கரோனா குறித்த விழிப்புணர்வுக்காக வங்கி ஊழியர் ஒருவர் தனது வீட்டிற்குள்ளேயே 42 கிமீ மராத்தான் ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 10,541 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 358 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கரோனா குறித்த விழிப்புணர்வுக்காக வங்கி ஊழியர் ஒருவர் தனது வீட்டிற்குள்ளேயே 42 கிமீ மராத்தான் ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் கொச்சி நகரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (50). இவர் கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட பெடரல் வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர்தான் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர். இதற்கு முன்னால் இவர் மும்பையில் நடைபெற்ற மராத்தான் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் அவர் கூறியதாவது:
ஞாயிறு காலை 10.30 மணியளவில் நான் எனது ஓட்டத்தைத் துவக்கினேன். எனது வீட்டின் சாப்பிடும் அறையிலிருந்து படுக்கை அறைக்கு ஓடி, அங்கிருந்து திரும்பினேன். ஒரு பக்கம் என்பது 15 மீட்டர் ஆகும். எனவே ஒருமுறை சென்று திரும்பினால் 30 மீட்டர் ஆகும். எனவே மதியம் 2.30 மணியளவில் நான் நிறைவு செய்த போது 42 கிமீ கடந்திருந்தது.
எனது தந்தை, மனைவி மற்றும் இரு குழந்தைகள் என்னை உற்சாகப்படுத்தினார்கள். ஓடியதால் தரையில் வழிந்திருந்த வியர்வையை அவர்கள் தொடர்ந்து தூய்மை செய்து கொண்டிருந்தார்கள்.
கரோனாவை நாம் வெல்ல வேண்டுமென்றால் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை உணடாக்கவே நான் இந்த முயற்சி எடுத்தேன். வெளியில் செல்ல முடியாதவாறு வீட்டில் இருக்க நேர்ந்தாலும் நம்மால் இதைச் செய்ய முடியும் என்பதை நான் மக்களுக்கு நிரூபித்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


