ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கேரளத்தில் இன்று ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று - மாநில சுகாதாரத்துறை 

கேரளத்தில் இன்று ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 3:24 pm

DIN

கேரளத்தில் இன்று ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு தேசிய ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. எனினும், நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. 

இந்த நிலையில் கேரளத்தில் இன்று ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 138ஆக உள்ளது. 

கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 255 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனா பாதித்த மாநிலங்களில் கேரளா முன்னணியில் இருந்தது. தற்போது அங்கு வைரஸ் பாதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.