அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மருந்து, மருத்துவ உபகரணங்களை எடுத்து வர சீனா புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2020, 9:22 am

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரோனா தொற்றைக் கண்டறியும் விரைவு பரிசோதனை கருவிகள், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை சீனாவில் இருந்து கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

அதற்காக தில்லியில் இருந்து ஏர் இந்தியா பி-787 விமானம் சீனாவின் குவாங்சொய் மாகாணத்துக்கு புறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 14,378 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 480 பேர் மரணம் அடைந்துள்ளனர். முன்னதாக சீனாவிடம் இருந்து விரைவு பரிசோதனை கருவிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியா வந்து சேர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.