சிலிகுரி: கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ரூ.33.81 கோடியை டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்திய ரயில்வே திருப்பி அளித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் பயணிகள் மற்றும் விரைவு ரயில் சேவையை முற்றிலும் ரத்து செய்தது இந்திய ரயில்வே. முதலில் ஏப்ரல் 14ம் தேதி வரை அனைத்து ரயில்களையும் ரத்து செய்த இந்திய ரயில்வே, பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மே 3 வரை மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
இதையடுத்து, ஏப்ரல் 14-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ரயில்களை முன்பதிவு செய்திருந்தவர்கள் 2,43,939 பேர் ஆகும், இந்த வகையில், இவர்களுக்கு மட்டும் இந்திய ரயில்வே சுமார் 22.41 கோடியை திருப்பி செலுத்தியது.
இதேபோல இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15ம் தேதி ரயில் சேவை ரத்து நடவடிக்கையால் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த 1,23,716 பயணிகளுக்கு ரூ.11.40 கோடியை இந்திய ரயில்வே திருப்பி அளித்துள்ளது.
இந்த வகையில், நேற்று வரை இந்திய ரயில்வே ஒட்டுமொத்தமாக ரூ.33.81 கோடியை பொதுமக்களுக்கு திருப்பி அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


