கரோனா: இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியது

இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியது.
கரோனா: இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியது
Published on
Updated on
1 min read

இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் இரண்டாவது முறையாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் கரோனா பாதித்தவர்களனின் எண்ணிக்கை 15,712 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 507 பேர் பலியான நிலையில் 2,231 பேர் பாதிப்பில் குணமடைந்துள்ளனர். 

இதனிடையே தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரில் 84 சதவீதம் போ் தப்லீக் ஜமாத் மாநாடு தொடா்பினால் நோய்த்தொற்றுக்கு ஆளானதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்
மகாராஷ்டிர - 3,651 
தில்லி - 1,893 
ம.பி.,- 1,407 
தமிழகம் - 1,372 
ராஜஸ்தான்-1,351 
குஜராத் - 1,376 உ.பி., - 969 
தெலுங்கானா - 809 
ஆந்திரா-603 
கேரளா-400 
கர்நாடகா-384 
புதுச்சேரி - 7 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com