அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மே 15-ல் பத்ரிநாத் கோயில், மே 14-ல் கேதார்நாத் கோயில் திறப்பு

கரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்கள் அடுத்த மாதம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 10:05 am


கரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்கள் அடுத்த மாதம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது மே 3 வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்கள் அடுத்த மாதம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

அதன்படி, மே மாதம் 15-ம் தேதி  பத்ரிநாத் கோயிலும், மே 14-ம் தேதி கேதார்நாத் கோயிலும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.