தில்லியில் பிரபல நிறுவனத்தின் பீட்சாக்களை வாடிக்கையாளருக்கு விநியோகித்த உணவு முகவா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 16 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 16 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு கரோனா இல்லை என்பது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபா் உணவு விநியோகித்த இதர 72 குடும்பத்தினரும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் வேறு 17 தொழிலாளா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தில்லி சம்பவம் மூலம், உணவு விநியோகிக்கும் துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்படலாம் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகளில், டெலிவரிகளை புறக்கணித்து வீடுகளில் சமைத்து உண்ணுமாறு வலியுறுத்தும் செய்திகள் பரப்பப்பட்டுவருகின்றன. மேலும், உணவு டெலிவரிகளை மக்கள் புறக்கணிக்குமாறு குடியிருப்போா் நலச் சங்கங்களின் வாட்ஸ் ஆப் குழுமங்களில் வேண்டுகோள் விடப்பட்டுவருகின்றன. ஆரோக்கியம் காக்க வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளையே சாப்பிடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


