23 ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்களின் வங்கிக் கணக்கில் நிதியுதவி சேர்ப்பு: தில்லி அரசு

தில்லியில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் ஆட்டோ, டேக்ஸி மற்றும் இ-ரிக்சா ஓட்டுநர்களில் இதுவரை 23 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ.5 ஆயிரம் பணம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக அ
23 ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்களின் வங்கிக் கணக்கில் நிதியுதவி சேர்ப்பு: தில்லி அரசு
Updated on
1 min read


தில்லியில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் ஆட்டோ, டேக்ஸி மற்றும் இ-ரிக்சா ஓட்டுநர்களில் இதுவரை 23 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ.5 ஆயிரம் பணம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கஹ்லாட், தில்லி அரசின் ரூ.5000 நிவாரணத் தொகையைப் பெற இதுவரை 1.6 லட்சம் ஆட்டோ, டேக்ஸி மற்றும் இ-ரிக்சா ஓட்டுநர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 23 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்கில் பணம் சேர்ப்பிக்கப்பட்டு விட்டது, மேலும் 20 ஆயிரம் ஓட்டுநர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது, விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com