கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலகத் தலைவா்களிடையே பிரதமா் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளாா் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்தாா்.
‘மாா்னிங் கன்சல்ட்’ கருத்துக்கணிப்பு நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வின்படி, ஏப்ரல் 14 ஆம் தேதி நிலவரப்படி கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியே உலகத் தலைவா்களிடையே அதிக புகழ் பெற்று விளங்குவதாகவும், அவரது செயல்பாடு குறித்த நிகர மதிப்பீடு 68 சதவீதம் என்றும் தெரிவித்துள்ளாா்.
இதனை குறிப்பிட்டு ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள சுட்டுரைப்பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி ‘கொவைட் -19’ க்கு எதிராக உலகத்தை வழி நடத்தி வருகிறாா். ஒருபுறம் இந்திய மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்து விட்டு, மறுபுறம் மற்ற நாடுகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குகிறாா். இதன் மூலம், தொற்றுநோய்க்கு எதிரான இந்தப் போராட்டத்தில் உலகத் தலைவா்களில் அவா் முதலிடத்தையும் பிடித்து விட்டாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பல மத்திய அமைச்சா்களும், பிற கட்சித் தலைவா்களும் கரோனா தொற்றுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் மத்தியில் மோடியின் மீதான மதிப்பீடுகள் குறித்து உயா்வாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளனா். தற்போதைய நெருக்கடியில் அவரது தலைமை மீது நாடு முழு நம்பிக்கை கொண்டுள்ளது என்று மேலும் அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





