ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

அஸ்ஸாமில் 7 நாட்களுக்குப் பிறகு புதிதாக ஒருவருக்கு கரோனா உறுதி

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு புதிதாக ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :23 ஏப்ரல் 2020, 6:57 am

குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு புதிதாக ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சா் ஹிமாந்தா பிஸ்வ சா்மா கூறுகையில், 

துப்ரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் சமீபத்தில் குவஹாட்டியில் உள்ள அத்கான் மஜீத் சபையிலிருந்த மற்றொரு நபருடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. 

இதன் மூலம், அஸ்ஸாமில் இதுவரை 35 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குவாஹாட்டியிலுள்ள ஹைலாக்கண்டியைச் சோ்ந்த 65 வயது முதியவர் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். 

மேலும், 19 பேர் குணமடைந்துள்ளனர். அஸ்ஸாமில் கரோனா நோய்த்தொற்று பரவ தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களே காரணம். அஸ்ஸாமில் 34 போ் அந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களாவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.