எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இலங்கை காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
மேலும் மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது. பின்னர் கைதான 12 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
Summary
The Sri Lankan Navy arrested 12 fishermen from Karaikal for fishing across the border.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்து வந்த தமிழக மீனவர்கள்!

ஈரானில் இருந்து மேலும் 312 இந்திய மீனவர்கள் மீட்பு! - மத்திய அரசு அறிவிப்பு!

தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைப்பிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 மீனவர்கள்!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு


