“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு!டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் லவ்லினா!காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்

இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா மன்னிப்பு கோர வேண்டும்: ராமதாஸ்

தமிழர் ஒற்றுமையைச் சிதைக்கத் துடிக்கும் இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா பேசிய பேச்சுகளை திரும்ப பெற்று மன்னிப்பு கோர வேண்டுவது குறித்து...

PMK Ramadoss

பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப் படம்

Published On :

தமிழர் ஒற்றுமையைச் சிதைக்கத் துடிக்கும் இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா பேசிய பேச்சுகளை திரும்ப பெற்று மன்னிப்பு கோர வேண்டும் என பாமக நிறுவனர்ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், தங்களின் அரசியல் உரிமை மற்றும் வாழ்வுரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். போராட்ட காலங்களில் தமிழினம் பின்னடைவைச் சந்தித்ததற்குச் சகோதர யுத்தங்களும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது.

இத்தகைய சூழலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை குறிவைத்து, "ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்" எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து, தரக்குறைவாகப் பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது.

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் வளர்வதைச் சகித்துக்கொள்ள முடியாத தீய சக்திகளின் ஏவலாளியாகச் செயல்பட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கத் துடிக்கும் இந்தத் துரோக அரசியலைத் தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது. அண்டை நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பேசுவதைச் சம்பந்தப்பட்ட அரசுகள் வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது.

எனவே, ராமநாதன் அர்ச்சுனா தனது ஜனநாயக விரோதப் பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, தம்பி சீமான் அவர்களிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary

PMK founder S. Ramadoss has urged Sri Lankan MP Ramanathan Arjuna-who is bent on undermining Tamil unity-to retract his remarks and offer an apology.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.