

அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முடிவு பற்றிக் கவலை தெரிவித்த மன்மோகன், அரசு ஊழியர்களின் மீது இத்தனை கஷ்டங்களைத் திணிக்க வேண்டியதில்லை என்றார்.
தற்போதைய சூழ்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவத்தினர் மீது இத்தகைய கடினமான நிலையைத் திணிப்பதைத் தாம் உண்மையிலேயே அவசியம் எனக் கருதவில்லை என்று டிவிட்டரில் வெளியிட்ட விடியோ செய்தியொன்றில் மன்மோகன் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.