

கர்நாடகத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 26 மாலை 5 மணி முதல் ஏப்ரல் 27 பகல் 12 மணி வரையிலும் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது வரை மொத்தம் 511 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 19 பேர் பலியாகியுள்ளனர், 188 பேர் கரோனாசிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கர்நாடக மாநில சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,892 ஆகவும், பலி எண்ணிக்கை 872 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 6,185 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.