தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

இஸ்லாமிய வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகள் வாங்காதீர்கள்: பாஜக எம்எல்ஏ., சர்ச்சைப் பேச்சு

இஸ்லாமிய வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகள் வாங்காதீர்கள் என்ற பாஜக எம்எல்ஏவின் பேச்சால் சர்ச்சை உருவாகியுள்ளது.

News image

சுரேஷ் திவாரி

Updated On :28 ஏப்ரல் 2020, 11:35 am

தியோரியா: இஸ்லாமிய வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகள் வாங்காதீர்கள் என்ற பாஜக எம்எல்ஏவின் பேச்சால் சர்ச்சை உருவாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள பர்ஹஜ் தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் திவாரி. இஸ்லாமிய வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகள் வாங்காதீர்கள் என இவர் தனது தொகுதி மக்களிடம் கூறும் விடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாகப் பரவியது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு அவர்  கூறியதாவது:

சில நாட்களுக்கு முன்னர் எனது தொகுதிக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்குள்ளவர்கள் ‘என்னிடம், ‘இஸ்லாமிய வியாபாரிகள் காய்கறிகளில் எச்சில் தடவிக் கொடுப்பதாக’ புகார் கூறினார்கள். அதற்கு நான் அவர்களிடம், தற்போதுள்ள சூழ்நிலையில் அவர்களிடம் காய்கறிகள் வாங்காதீர்கள் என்பதைத் தவிர என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது என்று கூறினேன். ஒரு எம்எல்ஏ வேறு என்ன கூறிவிட முடியும்? நான் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

இவ்வாறு தான் பேசியதை சரி என்று வலியுறுத்தி அவர் பதிலளித்தார்.                   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.