அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மும்பையில் 3 காவலர்கள் பலி; 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்

மும்பையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 3 காவலர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2020, 9:13 am


மும்பை: மும்பையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 3 காவலர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 52 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள், அதே சமயம், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் இருந்தால், அவர்களும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுவார்கள்.

மும்பையில் நடுத்தர வயதைச் சேர்ந்த மூன்று காவலர்கள் கரோனா பாதித்து மரணம் அடைந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்த உத்தரவை மும்பை காவல்துறை எடுத்துள்ளது.

அதேபோல மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சுமார் 12 ஆயிரம் காவலர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையும், 20 ஆயிரம் காவலர்களுக்கு சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.