தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

இந்தியாவில் குணமடைவோரின் விகிதம் 23.3% ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,869 ஆக உயர்ந்துள்ளதன் மூலம், நாட்டின் தொற்று பாதித்து குணமடைவோரின் விகிதம் 23.3% ஆக இருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 12:14 pm


புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,869 ஆக உயர்ந்துள்ளதன் மூலம், நாட்டின் தொற்று பாதித்து குணமடைவோரின் விகிதம் 23.3% ஆக இருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிதாக 1,543 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்த எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்தியாவில் கரோனா பாதித்து குணமடைவோரின் விகிதம் நேற்று 22.17 சதவீதமாக இருந்த நிலையில், இன்று அது 23.3% ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் 684 பேர் கரோனா பாதித்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம்தான் இந்தியாவில் குணமடைவோரின் விகிதமும் அதிகரித்துள்ளது.

அதே சமயம், கடந்த 28 நாட்களில் 17 மாவட்டங்களில் புதிதாக யாருக்கம் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும், இதன் மூலம் தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.