தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

அமெரிக்காவில் பெற்றோர்; ஹைதராபாத்தில் குழந்தையுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய காவல்துறை

ஹைதராபாத்தில் இருக்கும் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட முடியாத நிலையில், அதன் பெற்றோர் அமெரிக்காவில் சிக்கிக் கொள்ள,

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 9:41 am


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இருக்கும் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட முடியாத நிலையில், அதன் பெற்றோர் அமெரிக்காவில் சிக்கிக் கொள்ள, அவர்களது மனக்கவலையைப் போக்கும் வகையில், காவல்துறையினர் குழந்தையின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.

அமெரிக்காவில் பெற்றோர் இருக்கும் நிலையில், அவர்களது ஒரு வயது குழந்தை ஹைதராபாத்தில் உறவினர்களிடம் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவால், குழந்தையின் பிறந்தநாளுக்குக் கூட, பெற்றோரால் இந்தியா வர முடியாமல் போன நிலையில் அவர்களது சிறப்பு வேண்டுகோளை ஏற்று, ஹைதராபாத் காவல்துறை, பெற்றோரின் கவலையை தீர்த்துள்ளனர்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வரும் ஒரு வயது குழந்தையின் பெற்றோர், ஹைதராபாத் காவல்துறையை தொடர்பு கொண்டு தங்கள் நிலையை விளக்கினர்.

Story image

கரோனா தொற்றால் ஊரடங்கை அமல்படுத்துவதில் கடும் சிரமங்களை சந்தித்து வரும் ஹைதராபாத் காவல்துறை, செவ்வாய்கிழமையன்று ஹைதராபாத்தின் பர்காத்புரா பகுதிக்குச் சென்றனர். அங்கு சந்தீப் - ஹரிணியின் ஒரு வயது மகள் மைராவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள், காவல்துறை ஆய்வாளர், காவல் வாகன ஓட்டுநர் என ஒரு சில காவலர்கள், மைராவின் இல்லத்துக்குச் சென்று, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றது, அவர்களது உறவினர்களுக்கும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதல் பிறந்தநாளன்று, குழந்தையின் பெற்றோர் உடன் இல்லையே என்ற வருத்தம் உறவினருக்கும், பெற்றோருக்கும் நீங்கியது. 

காக்கும் பணியை மட்டும் செய்யாமல், ஊரடங்கு காலத்தில் மனதளவில் பாதிக்கப்படும் மக்களுக்கும் காவலர்கள் தங்களால் இயன்றதை செய்து, தன்னார்வலர்களாகவும் வலம் வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.