லக்னௌ: ‘இந்தப் பக்கமே வராதே’ என இஸ்லாமிய காய்கறிக்காரரை பாஜக எம்எல்ஏ எச்சரித்த விடியோ இணைத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரிஜ் பூஷன் சரண். இவர் இஸ்லாமிய காய்கறிக்காரர் ஒருவரை ‘இந்தப் பக்கமே வராதே’ என மிரட்டும் விடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகப் பரவியது.
இந்நிலையில் அந்த விடியோ குறித்து பிரிஜ் பூஷன் சரண் புதனன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஆமாம்; அது என்னுடைய விடியோதான். சில தினங்களுக்கு முன்னர் எனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அதன்காரணமாக குறிப்பிட்ட தினத்தன்று பணியில் இருந்த பாதுகாவலர்கள்அந்த நபரை யார் என்று விசாரித்தபோது அவர் பொய் கூறினார். அவர் தன்னுடைய பெயரை ராஜ்குமார் என்று கூறினார். ஆனால் அவரது பெயர் ரெஹ்முதீன். எனவே பொய் கூறியதற்காக நான் அவரை எச்சரித்து அனுப்பினேன்.
அவருடன் ஒரு குழந்தையும் இருந்தது. இருவரும் முகக்கவசம் அணியவில்லை. இது விதிமீறலாகும். கான்பூரில் 16 பேர் மற்றும் லக்னோவில் ஒருவர் என 17 காய்கறி வியாபாரிகள் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


