அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

உத்தரபிரதேசத்தில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்த சம்பவம் நடந்துள்ளது.

News image

மாதிரிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2020, 10:41 am

பாரபங்கி: உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் ராம் நகருக்கு அருகில் குதுல்பூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த குந்தன் கவுதம் என்பவரின் மனைவி பிரசவத்திற்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு புதன் காலை ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண் என மொத்தம் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குந்தன், ‘ஐந்து குழந்தைகள் மற்றும் தாய் என அனைவரும் நலமாக உள்ளனர். இதை நான் கடவுளின் பரிசு என்றே கருதுகிறேன். மருத்துவர்கள் முதலில் என் மனிவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கக் கூடும் என்று தெரிவித்தனர். ஆனால் இதனை நான் எதிர்பார்க்கவில்லை’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.