தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிதாக பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கும் போது.. ஏமாற வேண்டாம்

இணையதளத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க என்று கூகுள் தேடுபொறியில் தேடினால், ஏராளமான இணையதளங்கள் வந்து குவியும். அனைத்துமே மத்திய அரசின் இணையதளம்தான் என்று நம்மை நம்ப வைக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.

News image
புதிதாக பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கும் போது.. ஏமாற வேண்டாம்
Updated On :4 ஆகஸ்ட் 2020, 7:24 am

DIN

இணையதளத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க என்று கூகுள் தேடுபொறியில் தேடினால், ஏராளமான இணையதளங்கள் வந்து குவியும். அனைத்துமே மத்திய அரசின் இணையதளம்தான் என்று நம்மை நம்ப வைக்கும் விதத்தில் முகவரிகள் அமைந்திருக்கும்.

இதனால், இணையதளம் வாயிலாக புதிதாக பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது, தவறுதலாக போலி பாஸ்போர்ட் இணையதளங்களில் விண்ணப்பித்து தகவல்களைக் கொடுத்து ஏமாற வாய்ப்புள்ளது. 

அதாவது, ஓஆர்ஜி, இந்தியா.இன் என முடியும் ஐந்துக்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் இணையதளங்கள் பயன்பாட்டில் உள்ளன. 

www.indiapassport.org
www.passportindiaportal.in
www.passport-india.in
www.passport-seva.in 
www.applypassport.org

போன்ற இணையதளங்களின் விண்ணப்பித்து பொதுமக்கள் பலரும் தங்களது முக்கிய விவரங்களை அளிக்கும் நிலையும் ஏற்படலாம். இதனால் நமது தகவல்கள் திருடப்படுவதுடன், பணமோசடிக்கும் வாய்ப்புள்ளது.

இந்திய அரசின் மத்திய வெளியுறவு விவகாரத் துறையின் பாஸ்போர்ட் இணையதளத்தின் முகவரியைப் போன்றே, இந்த போலி இணையதளங்களின் முகவரிகளும் அமைந்திருப்பதால், பொதுமக்கள் உண்மையான பாஸ்போர்ட் இணையதளத்தை கண்டறிவதில் நிச்சயம் குழப்பம் ஏற்படும். 

இதுதான் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான இணையதளமாகும்.. Passport Seva

இது குறித்து பேராசிரியர் திரிவேணி சிங் ஐபிஎஸ், இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி. அறிவுறுத்தல் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், இதுபோன்ற போலியான இணையதளங்களில் பொதுமக்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், மத்திய அரசின் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான mpassport seva app செயலிலும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. பொது மக்கள் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசும், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தில் அறிவுறுத்தல் செய்தியை விளம்பரப்படுத்தியும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.