ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம்

கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்து காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது பணியாளர்களிடம் சம்பளப் பிடித்தத்தை அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம்

கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்து காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது பணியாளர்களிடம் சம்பளப்பிடித்தத்தை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் விமானப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்களும் தங்களது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. கடந்த 4 மாதகாலமாக சரிவர விமானப் போக்குவரத்து இல்லாததால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்து வருகின்றன.

இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஜூலை மாதம் வரை தனது வருவாயில் 88 சதவிகிதத்தை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விமான ஓட்டிகள் முதல் பலருக்கும் சம்பளப் பிடித்தத்தை அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்ட அலுவலக சுற்றறிக்கையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர் டி. விஜயகிருஷ்ணன், “கரோனா ஊரடங்கால்  ஜூலை மாதம் வரை நிறுவனத்தின் வருவாய் 88 சதவீதம் வரை குறைந்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கரோனாவால் ஏற்படும் மோசமான சூழலில் இருந்து மீளும் வரை மாத ஊதியம் பெறும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் உள்ள அனைவரும் தியாகத்தை ஏற்றுக்கொள்வது அவசியம்." என்று விஜயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் விமானிகளின் ஊக்கத்தொகை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.25 ஆயிரம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு எத்தகைய சம்பளப்பிடித்தமும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு 5 சதவிகிதமும், அதற்கடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு 7.5 சதவிகிதமும் பிடித்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com