கர்நாடகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
கர்நாடகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


பெங்களூரு: கர்நாடகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே அடுத்த 24 மணிநேரத்திற்கு கர்நாடகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கர்நாடகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கர்நாடக கடலோர பகுதிகளிலும், வடக்கு உள்கர்நாடக பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...