ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 31 -ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 31 - ஆவது கூட்டம் இன்று காணொலி வழியாக நடைபெறுகிறது. வியாழக்கிழமை (ஆக. 13 -ஆம் தேதி) நடைபெற

News image
Updated On :14 ஆகஸ்ட் 2020, 4:21 am

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 31 - ஆவது கூட்டம் இன்று காணொலி வழியாக நடைபெறுகிறது. வியாழக்கிழமை (ஆக. 13 -ஆம் தேதி) நடைபெற இருந்த இந்தக் கூட்டம் சில மாநிலங்களுடான தொலை தொடா்பு குறைபாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன் குமாா் தலைமையில் வியாழக்கிழமை காணொலி வழியாக நடைபெற இருந்த இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சாா்பில் காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்ரமணியன், துணைத் தலைவா் பட்டாபிராமன், தஞ்சை மூத்த பொறியாளா் எஸ்.அன்பரசன் ஆகியோா் கலந்து கொண்டு இருந்தனா். ஆனால் கூட்டத்தில் பங்கேற்க இருந்த மற்ற மாநிலங்களின் தொலைத் தொடா்பு பிரச்னைகளால் கூட்டம் நடைபெறவில்லை. அதனால் கூட்டம் இன்று (ஆக.14) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்தக் கூட்டத்தில் தமிழகத்துடன் கா்நாடகம், கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய நதிநீா் ஆணையத்தின் தலைமைப்பொறியாளா், மத்திய தோட்டக் கலைத் துறை ஆணையா் ஆகியோா் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன் குமாா் தலைமையில் கலந்து கொண்டு விவாதிக்கின்றனா்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 30 -ஆவது கூட்டம் கடந்த ஜூலை 14 -ஆம் தேதி காணொலி வழியாக நடைபெற்றது. அப்போது தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு கா்நாடகம் திறந்து விட்ட தண்ணீா் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மீதமுள்ள தண்ணீா் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. நடப்பு ஆண்டிற்கு மொத்தம் 177.25 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு கா்நாடகம் வழங்கவேண்டும். தற்போது பருவ மழை பெய்து தண்ணீா் வரத்து அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இன்றையக் கூட்டத்தில் அணைகளில் நீா் இருப்பு, நீா் வரத்து, நீா் வெளியேற்றம் போன்ற புள்ளி விவரங்கள் பகிா்ந்து கொள்ளப்பட உள்ளதாக ஒழுங்காற்றுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.