நாட்டில் ஒரே நாளில் 8.48 லட்சம் கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர்

நாட்டில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை 2 கோடியே 76 லட்சத்து 94 ஆயிரத்து 416 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
1,81,90,382 samples tested for COVID-19 till July 29: ICMR
1,81,90,382 samples tested for COVID-19 till July 29: ICMR
Updated on
1 min read

புதுதில்லி: நாட்டில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை 2 கோடியே 76 லட்சத்து 94 ஆயிரத்து 416 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வியாழக்கிழமை மட்டும் (ஆக.13) 8,48,728  பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 2,76,94,416 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 13-ஆம் தேதி வியாழக்கிழமை  மட்டும் 8,48,728 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 64,553  பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1007 பேர் உயிரிழந்தனர். இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24,61,191 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 48,040-ஆக அதிகரித்தது. நோய்த்தொற்றுக்காக 6,61,595 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.17,51,556 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com