அசாமில் கரோனா பலி எண்ணிக்கை 200-ஐ நெருங்குகிறது

அசாமில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் அதிகரித்து வருவதையடுத்து, பலி எண்ணிக்கையும் 200ஐ எட்டியுள்ளது. 
Assam COVID death toll nears 200
Assam COVID death toll nears 200
Updated on
1 min read

அசாமில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் அதிகரித்து வருவதையடுத்து, பலி எண்ணிக்கையும் 200ஐ எட்டியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு 1,929 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 55,215 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், ஒரேநாளில் 1,317 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து, மொத்தம் 76,875 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் நேற்று மட்டும் ஏழு பேர் பலியாகியுள்ளனர். மொத்தம்189 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதித்த 21,468 பேர் மருத்துவமனை தற்போது சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com