வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை காரணமாக வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. வடமாநிலங்களான ஹரியாணா, தில்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
அந்தவகையில் வடக்கு ராஜஸ்தானில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரம், கோவா ஆகிய பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...