தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவுகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். எல்லைப்பகுதியில் உள்ள மான்கோட் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை அடுத்து சக ராணுவ வீரர்கள் நிகழ்விடத்திற்கு சென்று பார்க்கும்போது ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதனைசெய்த மருத்துவர்கள் ராணுவ வீரர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.