கர்நாடகத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக அணைகள் நிரம்பியதால், காவிரி ஆற்றுக்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நன்றி செலுத்தினார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முக்கிய ஆறுகளிலும், கிளை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
கர்நாடகத்தின் காவிரி ஆற்றங்கரையையொட்டிய பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளன.
காவிரி நதியால் அணைகள் நிரம்பியதால் முதல்வர் எடியூரப்பா காவிரி ஆற்றுக்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தினார்.
மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டிணம் அருகே உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு சென்ற முதல்வர் எடியூரப்பா மலர் தூவி காவேரியை வணங்கினார். பிறகு அரிசி, பழங்கள், பூக்கள், புடவை உள்ளிட்டவற்றை வைத்து காவிரி ஆற்றுக்கு மரியாதை செலுத்தினார்.
பிறகு மைசூருவில் உள்ள கபினி அணைக்கு சென்று அங்கும் காவிரி ஆற்றுக்கு முதல்வர் எடியூரப்பா மரியாதை செலுத்தினார்.
பருவமழை காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தலைக்காவிரியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரியை தொடர்ந்து அதன் கிளை நதிகளான கபினி, ஹேமாவதி உள்ளிட்ட நதிகளும் நிரம்பியுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ்.டி.சோம்சேகர், மாண்டியா மக்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி, 36 பேர் காயம்
2,200 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள்... ஹோர்முஸ் நீரிணை அருகே வீசி ஈரானை மிரட்டிய அமெரிக்கா!

டிஆர்டிஓவில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

பதவி உயர்வு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

