ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

நாக்பூர்: பழமையான வீடு இடிந்து ஒருவர் பலி, 4 பேர் காயம்

நாக்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை பழமையான வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார், 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஆகஸ்ட் 2020, 9:30 am

நாக்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை பழமையான வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார், 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் சதர் பகுதியில் உள்ள ஆசாத் சவுக்கில் இன்று காலை 4.45 மணியளவில் 50 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்தது.   

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் கிஷோர் டெக்சுல்தான் (வயது 42) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் காயமடைந்த பிரபா டெக்சுல்தான் (55), லக்ஷ்மி டெக்சுல்தான் (65), லோகேஷ் டெக்சுல்தான் (22), ராகேஷ் சிரோஹியா (32) ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.