ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை ஐபிஎஸ்

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, சிங்கம் என்று அடைமொழியோடு அழைக்கப்பட்ட அண்ணாமலை இன்று பாஜகவில் இணைந்தார்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2020, 9:29 am

DIN


தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, கர்நாடகத்தின் சிங்கம் என்று அடைமொழியோடு அழைக்கப்பட்ட அண்ணாமலை இன்று பாஜகவில் இணைந்தார்.

புது தில்லியில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், பாஜக மாநில தலைவர் எல். முருகன் முன்னிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை,  தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை செய்வேன். பதவியை எதிர்பார்த்து பாஜகவில் இணையவில்லை. சாதாரண தொண்டனாகவே வந்துள்ளேன் என்று கூறினார்.

ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய அண்ணாமலை, பெங்களூரு, சிக்கமகளூரு பகுதிகளில் காவல்துறையின் முக்கியப் பதவிகளை வகித்து, தனது சிறப்பான பணியால் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டார். 2019-ஆம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, சமூக ஆர்வலராக மாறினார். தமிழகத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த அண்ணாமலை, இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

முன்னதாக, தான் ஒரு தேசியவாதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அபிமானி என்று கூறியிருந்த அண்ணாமலை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நினைத்ததுமே எனது முதல் தேர்வாக இருந்தது பாஜக தான் எனவும் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.