பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சர்கள் உள்பட 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்னும் இரண்டு நாள்களில் சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் செதரிவித்துள்ளார்.
மாநில சட்டமன்றத்தில் 117 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில், சட்டபேரவைக்குள் நுழைவதற்கு கரோனா எதிர்மறை அறிக்கையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சபாநாயகர் ராணா கே.பி.சிங் தெரிவித்தார்.
இந்நிலையில், கரோனா சோதனை செய்ததில் இதுவரை 23 எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 14 பேர் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆறு பேர் ஷிரோமணி அகலி தளத்தைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினரான திரிப்ட் ராஜீந்தர் சிங் பாஜ்வா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. ஆனால், தற்போது அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


