பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பெங்களூருவில் பெண்களுக்கான கழிப்பறைகளாக மாற்றப்படும் பழைய பேருந்துகள்

அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பழைய பேருந்துகளை புதிய மற்றும் பயனுள்ள வகையில்  மாற்றும் திட்டத்தை பெங்களூரு மாநகராட்சி கண்டுபிடித்துள்ளது.

News image

பெங்களூருவில் பெண்களுக்கான கழிப்பறைகளாக மாற்றப்படும் பழைய பேருந்துகள்

Updated On :28 ஆகஸ்ட் 2020, 7:16 am


பெங்களூரு: அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பழைய பேருந்துகளை புதிய மற்றும் பயனுள்ள வகையில்  மாற்றும் திட்டத்தை பெங்களூரு மாநகராட்சி கண்டுபிடித்துள்ளது.

பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்துக்கு வரும் ஏராளமான பெண் பயணிகளுக்கு கழிப்பறை வசதியை உருவாக்கும் வகையில், இந்த பழைய பேருந்துகளை கழிப்பறைகளாக மாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.12 லட்சம் செலவில் பழைய பேருந்துகளை மூன்று அறைகள் கொண்ட மகளிர் கழிப்பறைகளாக மாற்றி வருகிறது கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம். மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தின் முதல் பகுதியில் சூரிய சக்தியில் இயங்கும் பேருந்துகள் கழிப்பறைகளாக மாற்றப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டும் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட இடத்தை காலியாக வைத்து அதில் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவும், குழந்தைகளுக்கு துணி மாற்ற போன்றவற்றை மேற்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் லஷ்மண் நேற்று தொடக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.