சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மறைந்த கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானின் பெயரில் சாலை: உபி அரசு அறிவிப்பு

மறைந்த முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவரின் பெயர் சாலைக்குச் சூட்டப்படும் என உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா அறிவித்துள்ளார்.

News image

மறைந்த கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகான்

Updated On :29 ஆகஸ்ட் 2020, 10:46 am

DIN

மறைந்த முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவரின் பெயர் சாலைக்குச் சூட்டப்படும் என உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான சேத்தன் சவுகான் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் சேத்தன் சவுகானை நினைவுகூறும் வகையில் உத்தரப்பிரதேச சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்த சேத்தன் சவுகான் 1969ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமானார். உத்தரப்பிரதேசத்தின் சிவில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் சவுகான் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.