காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

என் மீதான பொறாமையினால் விமர்சிக்கிறார்கள்..! தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் ரஹானே!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானேவின் பேட்டி குறித்து...

Kolkata Knight Riders' captain Ajinkya Rahane plays a shot during the Indian Premier League cricket match between Kolkata Knight Riders and Sunrisers Hyderabad in Kolkata, India, Thursday, April. 2, 2026. (AP Photo/ Bikas Das)

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரஹானேவின் ஷாட். - படம்: ஏபி

Published On :

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே, “என் மீதான விமர்சனங்கள் பொறாமையினால் வைக்கப்படுகிறது” என்றார்.

இந்த சீசனில் கேகேஆர் முதல் அணியாக சேஸி செய்ய முடியாமல் தோல்வியுற்றது. அதிலும் சுமாரான பந்துவீச்சாளர்களை வைத்துள்ள சன்ரைசர்ஸ் அணியிடம் தோற்றது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 226/8 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கேகேஆர் அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் ரஹானே 10 பந்துகளில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி மோசமாக தோல்வியுற்றது. இது குறித்து ரஹானே பேசியிருப்பதாவது:

என்னுடைய ஸ்டிரைக் ரேட்? கடந்த 2020க்குப் பிறகு நான் இப்போதுதான் சிறந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறேன். என்னைப் பற்றி பேசுபவர்கள் போட்டியைப் பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை. அல்லது எனக்கு எதிராக ஒரு முன்முடிவினை வைத்திருக்கலாம்.

நான் விளையாடுவது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நான் அடைந்த வெற்றிகளால் அவர்கள் பொறாமை அடைந்திருக்கலாம். அதற்காக நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. என்னைப் பற்றி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சிலர் பேசுகிறார்கள். எப்படியோ என்னைப் பற்றி பேசுகிறார்களே அதுவே மகிழ்ச்சி என்றார்.

சையத் முஷ்டக் அலி தொடரில் ரஹானே 10 இன்னிங்ஸில் 391 ரன்கள் குவித்தார். அதில் 161 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Summary

Rahane says agenda, jealousy driving strike-rate criticism after KKR's successive defeats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.