பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சன்ரைசர்ஸ் அணியின் துணை கேப்டன் அபிஷேக் சர்மாவுக்கு 25% அபராதம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணை கேப்டன் அபிஷேக் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து...

Sunrisers Hyderabad's Abhishek Sharma leaves the ground after losing his wicket during the Indian Premier League cricket match between Kolkata Knight Riders and Sunrisers Hyderabad in Kolkata, India, Thursday, April. 2, 2026. (AP Photo/ Bikas Das)

ஆட்டமிழந்து வெளியேறிய அபிஷேக் சர்மா. - படம்: ஏபி

Published On :

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணை கேப்டன் அபிஷேக் சர்மாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதி 2.3ஐ மீறியதால் லெவல் 1 குற்றத்துக்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 226/8 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கேகேஆர் அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முஸர்பானி வீசிய பந்தில் அபிஷேக் அடித்த பந்தை வருண் சக்ரவர்த்தி சிறப்பான ஃபீல்டிங்கின் மூலம் ஆட்டமிழந்தார்.

இந்த கேட்ச்சில் போதுமான அளவுக்கு துல்லியத்தனமை இல்லை என நடுவரிடம் அபிஷேக் சர்மா தனது ஆட்சேபனையை தெரிவித்தார். இது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதால் அவருக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

Summary

Abhishek Sharma fined 25 per cent of match fee for showing dissent at umpire's decision.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.