3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

அதிவேக 100 சிக்ஸர்கள்... புதிய சாதனை படைத்த அபிஷேக் சர்மா!

டி20-ல் அதிவேக 100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் பட்டியலில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மாவைப் பற்றி...

News image

அபிஷேக் சர்மா.

Updated On :2 ஜூலை 2026, 2:27 pm IST

டி20-ல் அதிவேக 100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் பட்டியலில் இந்திய அதிரடி வீரர் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டி நேற்றிரவு செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டி முதல் பாதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.

இரண்டாவது ஆட்டத்தின் பாதியில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய, தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 6 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

இந்தப் போட்டியில் அதிரடியாக 4 சிக்ஸர்கள் விளாசிய அபிஷேக் சர்மா, டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

வெறும் 785 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டி, இதற்கு முன்னதாக 789 பந்துகளில் சாதனை படைத்திருயிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் எவின் லூயிஸின் முந்தைய சாதனையை முறியடித்தார். 

Story image

குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்கள் அடித்தவர்கள்

  • அபிஷேக் ஷர்மா - 785 பந்துகள்

  • எவின் லூயிஸ் - 789 பந்துகள்

  • கரன்பீர் சிங் (ஆஸ்திரியா) - 848 பந்துகள்

  • ஃபின் ஆலன் (நியூசிலாந்து) - 871 பந்துகள்

  • டிம் டேவிட் (ஆஸ்திரேலியா) - 932 பந்துகள்

Summary

Abhishek Sharma scripted history by becoming the fastest batter to 100 T20I sixes, reaching the milestone in just 785 balls before smashing a blistering 59 off 24 against England in the first T20I.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.