ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர் முழுவதும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, இன்று (ஜூலை 26) கடைசிப் போட்டியில் விளையாடி வருகிறது.
தொடர்ச்சியாக அபிஷேக் சர்மா சொதப்பல்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றுவிட்ட போதிலும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
அதிரடியாக விளையாடுவதை வழக்கமாகக் கொண்ட அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாவது டி20 போட்டியில் 8 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் அவர் சோபிக்கவில்லை. மீண்டும் அவர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மூன்றாவது போட்டியில் அவர் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இரண்டாவது டி20 போட்டியில் பந்துவீச்சில் ஈடுபட்ட அபிஷேக் சர்மா 2.5 ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் இந்திய அணிக்காக அவரது சிறந்த பங்களிப்பு என்று இதனைக் கூறலாம். ஆனால், பேட்டிங்கைப் பொருத்தவரை அவரது சொதப்பலான ஆட்டம் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
Summary
Indian opener Abhishek Sharma has put up a poor performance throughout the T20 series against Zimbabwe.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











