தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வருண் சக்ரவர்த்தி விலகல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி விலகியுள்ளார்.

News image

வருண் சக்ரவர்த்தி

Updated On :13 ஜூலை 2026, 7:44 pm IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக வருண் சக்ரவர்த்தி விலகியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், நாளை (ஜூலை 14) முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு, இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான இந்திய அணியை அண்மையில் பிசிசிஐ அறிவித்தது.

இந்த நிலையில், காயம் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக அணியில் ரவி பிஷ்னோய் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது, வருண் சக்ரவர்த்தி அசௌகரியமாக உணர்ந்துள்ளார். அதன் பின், அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டதில் காயம் ஏற்பட்டது உறுதியானது. இதனையடுத்து, அவர் ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா (துணைக் கேப்டன்), இஷான் கிஷன், ஷிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, பிரின்ஸ் யாதவ், யஷ் தாக்குர், அசோக் சர்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங், ரவி பிஷ்னோய்.

Summary

Varun Chakravarthy has withdrawn from the T20 series against Zimbabwe due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.