6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா விலகியுள்ளார்.

Hardik Pandya

ஹார்திக் பாண்டியா - படம் | AP

Published On :

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா விலகியுள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் முழு உடல்தகுதி பெற்றுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹார்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக அடுத்த மூன்று வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

காயம் காரணமாக அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா சில போட்டிகளில் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.

Summary

All-rounder Hardik Pandya has withdrawn from the ODI series against Afghanistan due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.