காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

முழு உடல்தகுதி பெற்ற ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா; ஒருநாள் தொடருக்குத் தயார்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா முழு உடல் தகுதி பெற்றுள்ளனர்.

Hardik pandya

ஹார்திக் பாண்டியா - படம் | AP

Published On :

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா முழு உடல் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெறுகிறது.

காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ-ன் மருத்துவக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், காயம் காரணமாக அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரின் பல போட்டிகளில் விளையாடாத ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது உறுதியாகியுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெறும் நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே லக்னௌ மற்றும் சென்னையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Rohit Sharma and Hardik Pandya have attained full fitness to play in the ODI series against Afghanistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.