ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒருநாள் தொடர் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா முழு உடல்தகுதியுடன் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா முழு உடல்தகுதி பெற்றுவிட்டார்களா என்பது தெரியவில்லை. ஆனால், ஒருநாள் தொடரில் அவர்கள் இருவரும் இருப்பார்கள். அவர்கள் இருவரும் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால், அவர்கள் உடல்தகுதி சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். ஒருநாள் தொடருக்கான பயிற்சியை இந்திய அணி நாளை முதல் தொடங்குகிறது என்றார்.
காயம் காரணமாக ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
Summary
Doubts have arisen as to whether both Rohit Sharma and Hardik Pandya will play in the ODI series against Afghanistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் இந்திய வீரர்... லார்ட்ஸில் வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்திக் பாண்டியா இல்லை! காரணம் கூறாத பிசிசிஐ!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்!

முழு உடல்தகுதி பெற்ற ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா; ஒருநாள் தொடருக்குத் தயார்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




