இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி மூன்று நாள்களில் முடிவடைந்தது தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. நியூ சண்டீகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் மூன்றே நாள்களில் நிறைவடைந்துவிட்டது.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் கடும் போட்டி இருக்க வேண்டும் எனவும், போட்டி 5 நாள்கள் வரை விளையாடப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அனி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது நல்ல உணர்வைத் தருகிறது. ஆனால், போட்டி மூன்றே நாள்களில் நிறைவடைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. என்னைப் பொருத்தவரை, டெஸ்ட் போட்டி ஐந்து நாள்கள் வரை நீடிக்க வேண்டும். ஐந்தாவது நாளில் ஆடுகளம் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர் என இருவருக்கும் சவாலளிக்கும் விதமாக இருக்கும். வீரரின் தரத்தினை சோதிப்பதாக கடைசி நாள் போட்டி இருக்கும்.
தற்போது டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாள்கள் வரை நீடிப்பதில்லை. ஐந்து நாள்களுக்கு முன்பாகவே போட்டி நிறைவடைந்து விடுகிறது. ஏற்கனெவே கூறியதுபோல, டெஸ்ட் போட்டியானது ஐந்து நாள்கள் வரை விளையாடப்பட வேண்டும். அதிரடியாக விளையாடுவதற்கு ஒருநாள், டி20 போன்ற குறுகிய வடிவிலான ஆட்டங்கள் உள்ளன என்றார்.
Summary
Glenn McGrath has expressed that he is not happy about the Test match between India and Afghanistan concluding in three days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முல்லான்பூர் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்!

இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி மழையினால் நிறுத்தம்..! அறிமுக வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பு!

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்: கிளன் பிலிப்ஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




