இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவலில் நேற்று (ஜூன் 17) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
நியூசிலாந்து அணி முதல் நாளில் 7 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்திருந்தது. கிளன் பிலிப்ஸ் 49 ரன்களுடனும், கைல் ஜேமிசன் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜூன் 18) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. கிளன் பிலிப்ஸ் மற்றும் கைல் ஜேமிசன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளன் பிலிப்ஸ் அதிகபட்சமாக 135 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து, டாம் பிளண்டெல் 51 ரன்கள், டேரில் மிட்செல் 44 ரன்கள், கைல் ஜேமிசன் 41 ரன்கள், ரச்சின் ரவீந்திரா 33 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜேக்கோப் பெத்தேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஃப்ரா ஆர்ச்சர், மேத்யூ ஃபிஷர் மற்றும் சோனி பேக்கர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜோஷ் டங் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
Summary
In the second Test match against England, the New Zealand team was bowled out for 391 runs in the first innings.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லார்ட்ஸ் டெஸ்ட்: கிராந்தி கௌட் 5 விக்கெட்டுகள்; 170 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

லார்ட்ஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழப்பு!

கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து!

நியூசி.க்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி; மீண்டும் எழுச்சி பெறுகிறதா பேஸ்பால் யுக்தி?
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |




