நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்! பட்ஜெட் தாக்கல் எப்போது?

பட்ஜெட் தாக்கல் தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது பற்றி...

News image

முதல்வர் சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 5:38 pm IST

தமிழ்நாடு முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைச்சரவைக் கூட்டம் வருகிற ஜூலை 16 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி இந்தாண்டு தொடக்கத்தில் முந்தைய திமுக ஆட்சியில் 2026- 27 இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக துறைவாரியாக நாள்தோறும் முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வருகிற ஜூலை 16 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2026 -27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

TN cabinet meeting on july 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.