எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடக்கம் விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் கேப்டன் விலகல்!

முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் விலகியுள்ளார்.

litton das

லிட்டன் தாஸ் - படம் | AP

Updated On :

முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் விலகியுள்ளார்.

வங்கதேசம், ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (அக்டோபர் 17) தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், காயம் காரணமாக முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தொடரின் முதல் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பது உறுதியானதால் போட்டி ஆரம்பிக்கும் முன்பே அவர் முத்தரப்பு தொடரிலிருந்து விலகுவதை வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது.

காயம் காரணமாக விலகியுள்ள லிட்டன் தாஸுக்குப் பதிலாக அணியில் பர்வேஸ் ஹொசைன் இமோன் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேப்டன் லிட்டன் தாஸ் விலகிய நிலையில், வங்கதேச அணியை துணைக் கேப்டன் தௌகித் ஹிரிடாய் கேப்டனாக வழிநடத்துவது குறிப்பிடத்தக்கது.

Summary

Bangladesh captain Litton Das has withdrawn from the triangular ODI series due to an injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.