
வங்கதேசம், ஜிம்பாப்வே முத்தரப்பு தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு... முகமது நபி நீக்கம்!
வங்கதேசம், ஜிம்பாப்வே முத்தரப்பு தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்
வங்கதேசம், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முத்தரப்பு தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்தத் தொடர் அக். 27 ஆம் தேதி தொடங்கி நவ. 17 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இதற்காக போட்டி நடைபெறும் திடல் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதே நேரத்தில் அதற்கு முன்னதாக, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற அக். 17 தொடங்கி அக். 23 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணி, அக். 9 ஆம் தேதி வங்காளதேசத்திற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியுடன் தனது தொடரைத் தொடங்குகிறது. இந்த நிலையில், இந்தத் தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிரடி மாற்றமாக மூத்த வீரர் முகமது நபி டி20 தொடரிலிருந்தும், டார்விஸ் ரசூலி ஒருநாள் மற்றும் டி20 தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 25 வயதான வேகப்பந்து வீச்சாளர் அப்துல்லா தரகைல் முதல்முறையாக டி20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆப்கன் டி20 அணி
இப்ராஹிம் ஜத்ரன் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நூர் ரஹ்மான், செதிகுல்லா அடல், முகமது அக்ரம், ஷாஹிதுல்லா, இஜாஸ் அகமது, அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், அப்துல்லா தரகைல், ரஷீத்கான், நூர் அகமது, முஜூபுர் ரஹ்மான், ஃபஸல்ஹக் பரூக்கி, அப்துல்லா அஹ்மத்ஸாய், ஃபரீத் ரஹ்மான்.
Summary
Afghanistan announced on Thursday they will continue to rest masterclass spin bowler Rashid Khan from Test cricket as they put forward their squads for a series against Bangladesh and Zimbabwe.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






