எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடக்கம் விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

இந்திய அணியில் இடம்பெறாத முகமது ஷமி; முடிவுக்கு வருகிறதா சர்வதேச கிரிக்கெட் பயணம்?

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமியின் எதிர்காலம் குறித்து...

Mohammed Shami

முகமது ஷமி - படம் | AP

Updated On :

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான அணியை பிசிசிஐ நேற்று (அக்டோபர் 16) அறிவித்தது.

இந்திய அணிக்காக முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு மார்ச்சில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடியிருந்தார். அதன் பின், அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அண்மையில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் அவர் இடம்பெறவில்லை.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. அதனைக் கருத்தில்கொண்டு அதற்கேற்றவாறு அணியை தயார் செய்து வருகிறது பிசிசிஐ. நியூசிலாந்துக்கு எதிரான முக்கியமான தொடரில் இடம்பெறாத முகமது ஷமி, அடுத்தடுத்தத் தொடர்களில் இந்திய அணியில் இடம்பிடிப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால், அவரது சர்வதேச கிரிக்கெட் பயணமும் கேள்விக்குறியாகியுள்ளது.

36 வயதாகும் முகமது ஷமி நடப்பாண்டு ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணிக்காக 37 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும், துலீப் கோப்பையில் மூன்று போட்டிகளில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள போதிலும், கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக அவரது பந்துவீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் விளையாடிய அவர் 6 விக்கெட்டுகளையும், இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் 13 போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ஐபிஎல் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் மற்றொரு மூத்த வீரரான புவனேஷ்வர் குமார் (36 வயது), நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Regarding the future of Mohammed Shami, one of the senior fast bowlers for the Indian team in international cricket...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER