ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணையும் முகமது ஷமி; லக்னௌவில் இணையும் சாம் கரண்!

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி, ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அடுத்தாண்டு ஐபிஎல் சீசனுக்கு முன்பாக ஐபிஎல் மினி ஏலம் கோவாவில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது ஷமி டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

முகமது ஷமி ரூ. 10 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 8 கோடிக்கு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் 132 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 145 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். முகமது ஷமி மட்டுமின்றி, இடதுகை சுழற்பந்துவீச்சாளரான எம். சித்தார்த் ரூ. 75 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார்.

முகமது ஷமிக்குப் பதிலாக லக்னௌ அணியில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரண் இணைந்துள்ளார். அவர் ரூ. 2.4 கோடிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். சாம் கரண் ஐபிஎல் தொடரில் 59 விக்கெட்டுகள் மற்றும் 997 ரன்கள் எடுத்துள்ளார்.

Summary

Indian fast bowler Mohammed Shami has joined the Rajasthan Royals through a trade.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.