ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புரெவி புயல்: திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல்

புரெவி புயல் எதிரொலியாக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image
புரெவி புயல்: திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல் (கோப்புப்படம்)
Updated On :4 டிசம்பர் 2020, 6:07 am

DIN

புரெவி புயல் எதிரொலியாக திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலான விமானங்கள் இயக்கப்படாது என்றும், இன்றைய பயண நேரத்தை மாற்றியமைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புரெவி புயல் வியாழக்கிழமை மாலை பாம்பன் அருகே நெருங்கி வரும்போது வலுவிழந்தது. 

இது ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே வியாழக்கிழமை நள்ளிரவு கரையைக் கடக்க தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலையில் முழுமையாகக் கடந்தது.

புயல் வலுவிழந்தாலும் தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலோரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று ஒருநாள் மூடப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் இரவு 6 மணிவரையில் விமானங்கள் இயக்கப்படாது என்றும், இன்றைய பயணத்தை ரத்து செய்து பயணிகளின் விருப்பத்திற்கேற்ப மாற்று தேதியில் பயண தேதியை அமைத்துக்கொள்ள விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அவசர கால பயணத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.